மெத்தியூஸை விலகுமாறு வேண்டுகோள் : சந்திமாலை தலைவராக்க தீர்மானம்

68

இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஒரு நாள் போட்டித் தொடரில் இலங்கையை தலைமை தாங்குவதற்காகவே சந்திமல் நியமிக்கப்படவுள்ளார்.

இந்நிலையில் அணித்தலைவராக செயற்பட்டுவரும் அஞ்சலோ மெத்தியூஸை ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 போட்டிகளின் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE