யாழ். குடாநாட்டிற்கு அவசரமாக இராணுவ உதவி?

43

யாழ். குடாநாட்டில் ஆவா குழுவை ஒடுக்குவதற்காக பொலிஸார் அவசரமாக இராணுவத்தின் உதவியை கோர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

தெற்கில் வன்முறை குழுக்களை அடக்குவதற்கு எவரும் அனுமதி கோருவதில்லை. தேவையான நேரத்தில் படையினர் களமிறங்குவர். வடக்குக்கு மட்டும் தனிச்சட்டமா என்ன?

எனவே, ஆவா குழு போன்ற சமூகவிரோத குழுக்களை ஒழிப்பதற்குப் பொலிஸார், இராணுவத்தின் உதவியை அவசரமாக கோர வேண்டும்.

அதேவேளை, விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசிய விஜயகலாவுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதற்கு எதிராக சபையில் குரல் கொடுத்தவர்கள் வெளியே போடப்பட்டுள்ளனர். இதுதான் ஜனநாயகம், நல்லாட்சி என குறிப்பிட்டுள்ளார்.

SHARE