வெலிங்டன் குடியிருப்பில் தீ விபத்து

13

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட  கொட்டகலை வெலிங்டன் தோட்டத்தில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது.

இந்த இரு வீடுகளிலும் இருந்த 08 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் மின்சார கசிவின் காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லை எனவும், பிறகு எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு  அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதேவேளை இது தொடர்பாக அட்டன் பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE