மஸ்கெலியாவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர் கைது

46

மஸ்கெலியா, ஹப்புகஸ்தென்ன பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத  கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை மஸ்கெலியா பொலிஸார்மேற்கொண்ட சுற்றி வளைப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புகஸ்தென்ன பகுதியில் சிவனொளிபாதமலை காட்டுப்பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வருவதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து விரைந்த பொலிஸார்  நேற்று முந்தினம் இரவு நிலையத்தினை சுற்றிவளைத்தனர்.

இதன்போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்த்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மில்லிலீற்றர் கோடா, மற்றும் 375 மில்லிலீற்றர்  கசிப்பு உட்பட கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரையும் மற்றும் மீட்கப்பட்ட பொருட்கள் ஆகியனவையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

SHARE