வெறும் மூன்றே நாட்களில் தொப்பையை குறைக்க

47

தொப்பையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது.

அதற்கு பதிலாக உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.

அந்த வகையில் தொப்பையின் அளவை மூன்று நாட்களில் குறைக்க தொடர்ந்து இந்த ஜூஸை குடித்து வந்தால் உடல் எடையில் நன்கு மாற்றத்தைக் காணலாம்.

வெள்ளரிக்காய்

நீர்சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காய் உடல் எடையை குறைக்க உதவும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று. மேலும் இவை வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருள் ஆகும்.

எலுமிச்சை

எலுமிச்சை பசியைக் கட்டுப்படுத்தி உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

புதினா

புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது.

இஞ்சி

இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்து உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது.

தண்ணீர்

தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும்.

தேவையான பொருட்கள்
 • வெள்ளரிக்காய்- 1
 • எலுமிச்சங்காய்- 5-7
 • புதினா இலைகள்- தேவையான அளவு
 • துருவிய இஞ்சி- 2 டேபிள் ஸ்பூன்
 • தண்ணீர்- 2.5 லிட்டர்

செய்முறை
 • முதலில் வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
 • பின் 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து அதில் புதினாவை நறுக்கி போட்டு அதில் தேவையான அளவு நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
 • பின்பு அதில் இஞ்சி போட்டு நன்கு கிளறி ஒரு நாள் முழுவதும் நன்கு ஊற வைத்து பின் அந்த ஜுஸை குடிக்க வேண்டும்.
 • இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால் தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.
குறிப்பு
 • மேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம்.
 • அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.
SHARE