அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்று சிறுதுண்டு பிளாஸ்டிக் கூட கடலாமைகளுக்கு கொடியதாக அமையலாம் என உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வில் ஒரு தனி பிளாஸ்டிக் 20 வீதம் இறப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவே 14 துண்டு பிளாஸ்டிக் இறப்புக்கள் 50 வீதமாக அதிகரிப்பதும் அவதானிக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் இளம் கடலாமைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் உலகளவில் 50 வீதமான கடலாமைகள் பிளாஸ்டிக்கை உள்ளெடுத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.