‘‘மகளுக்கு பிடிக்காத கதைகளில் நடிக்க மாட்டேன்’’ –அபிஷேக்பச்சன்

32
‘‘மகளுக்கு பிடிக்காத கதைகளில் நடிக்க மாட்டேன்’’ –அபிஷேக்பச்சன்
மகளுக்கு பிடிக்காத படங்களில் நடிக்க மாட்டேன் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.
மனைவி ஐஸ்வர்யாராயுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படமொன்றில் ஜோடியாக நடிக்கிறார் அபிஷேக் பச்சன். சினிமா வாழ்க்கை மற்றும் மகள் ஆரத்யா குறித்து அபிஷேக் பச்சன் அளித்த பேட்டி வருமாறு:–
‘‘எனக்கு காதல் கதைகளை விட அதிரடி படங்களில் நடிக்கவே ஆசை. ஏற்கனவே நான் நடித்துள்ள பல படங்கள் அதிரடி படங்கள்தான். படப்பிடிப்பில் டைரக்டருக்கு திருப்தி ஏற்பட்டாலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இன்னொரு தடவை நடிக்கட்டுமா? என்று கேட்பேன். அப்படி ஈடுபாடு இல்லாமல் நடிகராக நீடிக்க முடியாது. வளரவும் முடியாது.
எனது தந்தை அமிதாப்பச்சனுக்கு 75 வயது ஆகிறது. இப்போதும் அவர் நடிப்பதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. படத்துக்கு படம் வித்தியாசமாக நடித்து அவரை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். அப்பாவும் நானும் தந்தை மகன் என்று இல்லாமல் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.
18 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். ரசிகர்கள் விரும்புவதுவரை நடிப்பேன். அதன்பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவேன். மகள் ஆரத்யாவை சிறப்பாக வளர்ப்பதில் ஐஸ்வர்யாராயும் நானும் அக்கறை எடுக்கிறோம். மகளுக்கு பிடிக்காத அவளுக்கு எரிச்சலூட்டும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க மாட்டேன். ஆரத்யாவை சினிமாவில் நடிக்கும்படியும் வற்புறுத்த மாட்டோம். பிடித்த துறையில் அவள் ஈடுபடலாம்.’’
இவ்வாறு அபிஷேக் பச்சன் கூறினார்.
SHARE