சம்மந்தன் குழுவினர் தமிழ் மக்களுக்கு விரோதமான முடிவினை எடுத்துள்ளனர். முன்னால் அமைச்சர் றிசாட் பதியுதீனை விமர்சித்தவர்கள் இப்போது யாருக்கு அதிக பங்கு இலாபம் பெறுவதென முண்டியடிக்கிறார்கள். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு முரணான செயலாகும்-ப.உதயராசா

136

 

சம்மந்தன் குழுவினரின் சதி வலைக்குள் சிக்காது தமிழ் மக்கள் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவினையே ஆதரிக்க வேண்டும்! ப.உதயராசா

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறிரெலோ கட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினையே ஆதரிக்கும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

z_p08-President6

வடக்கிலே யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அபிவிருத்தி பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்த வேண்டிய தேவைப்பாடு வடக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு இருக்கிறது. இதனை ஏற்கனவே திட்டமிட்டு செயற்படுத்தி வரும் ஒருவரிடமே நாம் நாட்டை ஒப்படைக்க முடியும்.

எம்மைப் பொறுத்தவரை எவ்விதமான தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக இருந்தாலும் பாராளுமன்ற அங்கீகாரத்துடனே சாத்தியமாகும் என்பதில் அளப்பரிய நம்பிக்கையுண்டு. அந்த தீர்வினை அங்கீகரிக்க வேண்டுமாக இருந்தால் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை.

தமிழ் தேசியத்திற்கு எதிரான சிங்கள தேசியம் வலுப்பெற்று வருவதனால் பெரும்பான்மை இனங்களை சேர்ந்த பாராளுமன்ற பிரதிநிதிகள் ஒரு போதும் விரும்பி தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கப்போவது இல்லை. இந்நிலையில் தான் சிறுபான்மை மக்களாகிய தமிழ் மக்களுக்கு பாராளுமன்ற அதிகாரத்தை மீறி நாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கூடிய ஜனாதிபதி முறை அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.

ஏனெனில் எந்த சட்ட மூலத்தையும் நிராகரித்து வாக்களிப்பதற்கு எங்களது தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இந்நிலை இன்று மட்டுமல்ல என்றும் சாத்தியப்படப்போவது இல்லை. யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கி புலம் பெயர் நாடுகளிற்கு சென்றவர்கள் ஒரு தொகுதி போக அதிகமான இளைஞர் யுவதிகளை இழந்திருக்கின்றோம். இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களை விஞ்சும் அளவிற்கு அபரிவிதமான தக்கன பிழைத்தல் வளர்ச்சியை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கிறது.

ஆகவே நாம் எத்தகைய இனப்பிரச்சினை தீர்வு திட்டங்களாக இருந்தாலும் பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை கொள்ளமுடியாது.

இது இன்று நேற்று அல்ல காலம் காலமாக தமிழ் மக்களிற்கு நடந்துவரும் கொடுரமும் ஆகும். அதனால் தான் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஆதரிக்குமாறு தமிழ் மக்களை கேட்டுக்கொள்கின்றோம்.

அது மாத்திரமன்றி புதிய ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்க பொது வேட்பாளராக தன்னை இனங்காட்டிக் கொள்பவர் பிறப்பாலோ வளர்ப்பாலோ தமிழரும் அல்ல தமிழ் மக்களில் அக்கறை கொண்டவரும் அல்ல. அவரது செயற்பாடுகள் எடுப்பார் கைப்பிள்ளை போலவும் சிறுபிள்ளைத்தனமானதுமாகவே அமைந்திருக்கிறது.

sri-lanka-marks

அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைத் தீர்வுத்திட்டம் தொடர்பாக எதுவும் சொல்லப்படவில்லை. மாறாக வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை தொடர்ச்சியாக நிலைகொள்ள செய்வதும் வடமாகாணத்திற்குரிய பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தன் கைவசம் வைத்திருப்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ளார். தென்னிலங்கையில் இனவாதத்தையும் வடக்கிலே நீலிக்கண்ணீர் வடிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

பொது வேட்பாளரையும் அவரது பரிவாரங்களுடைய நோக்கம் நாட்டை அபிவிருத்தி செய்வது அல்ல. மாறாக அபிவிருத்தியில் கொள்ளை இலாபமீட்ட சந்தர்ப்பத்தை வகுத்துக் கொள்வதாகும். அரசியலை வியாபாரமாக செய்வதே அவர்களது முயற்சி.

மக்கள் பிரதிநிதிகளிற்கு அரசாங்கம் மாதாந்தம் சம்பளம் ஒன்றை வழங்குகின்றது. அரசியல்வாதிகள் மக்களிற்கு சேவை செய்ய முன்வரவேண்டுமே தவிர நாட்டு மக்களின் வளங்களை கொள்ளையிட முனையக்கூடாது.

அம்பாறை மாவட்டத்தை தனி முஸ்லிம் மாவட்டமாக அறிவிக்ககோரி பலனளிக்காத சந்தர்ப்பத்திலே அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பொதுவேட்பாளரை ஆதரிக்க முன்வந்துள்ளது. இந்நிலை மிக மோசமானது தமிழ் மக்களின் வடக்கு கிழக்கு இணைப்பினை குழி தோண்டி புதைக்கும் செயலாகும்.

hakeem2இந்நிலையில் சம்மந்தன் குழுவினர் தமிழ் மக்களுக்கு விரோதமான முடிவினை எடுத்துள்ளனர். முன்னால் அமைச்சர் றிசாட் பதியுதீனை விமர்சித்தவர்கள் இப்போது யாருக்கு அதிக பங்கு இலாபம் பெறுவதென முண்டியடிக்கிறார்கள். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு முரணான செயலாகும்.

சம்பந்தன் குழுவினர் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவர்களாக மேடைகளில் தங்களை அரங்கேற்றுபவர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். அவ்வாறெனின் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரினை ஆதரிப்பது என எடுத்த முடிவு பொதுவேட்பாளர் தழிழிச்சிக்கு பிறந்ததாகவா பிறப்புச்சான்றிதழ் கொடுக்கமுனைகின்றனர்.

பணத்திற்கும் பதவிக்கும் சோரம் போவது
சம்மந்தன் குழுவினருக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. ஆயினும் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியிடம் தமிழ் மக்களை அடைவு வைத்து 2004ம் ஆண்டு ரனில் விக்கிரமசிங்க தலைமையில் தமிழ் மக்களின் போராட்டங்களை சிதைத்தவர்களிற்கு வாழ்வுகொடுத்து அப்பாவி தமிழ் இளைஞர் யுவதிகளை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல முனைகின்றனர்.Bajit-Maginta-Tna-01

18 வது திருத்தச்சட்டம் உள்ளிட்ட இறுதி யுத்தம் வரை தனது ஆதரவையும் மகிழ்ச்சியையும் வெளியிட்டு பாராளமன்றக் கதிரைகளை அலங்கரித்த ஒருவர் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டு சில நாட்களில் தன்னை தமிழ் மக்களை மீட்க வந்த கண்ணபிரான் ஆகவும் ஜேசு பாலனாகவும் சித்தரிப்பதை நம்புவதற்கு தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை ஏன் இன்னும் சம்மந்தன் குழுவினர் புரிந்து கொள்ளவில்லை என்பது வியப்பளிக்கிறது.

எனினும் சம்மந்தன் குழுவினர் வழமையாக எடுக்கும் முடிவிற்கு எதிரான முடிவினையே தமிழ் மக்களும் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளும் உணர்த்தி வந்துள்ளன. ஆகவே தமிழ் மக்கள் சம்மந்தன் குழுவினரின் சதி வலைக்குள் சிக்காது நீதியுடனும் அர்ப்பணிப்புடனும் அபிவிருத்தியை நோக்கிய அமைதியான பயணத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுடன் இணைந்து அதிகபடியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்ட தங்கள் வாக்கு பலத்தினை பிரயோயிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TPN NEWS

SHARE