எமது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள் – ஐ.நாவில் மைத்திரிபால சிறிசேன

18

எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள். இதில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை அமர்வில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வு நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐ. நா தலைமையகத்தில் ஆரம்பமானது.

முழு உலகும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட பொதுச்சபை கூட்டத்தொடர் “ஐக்கிய நாடுகள் சபையை சகல மக்களுக்கும் அணுகச் செய்தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது.

இந்த பிரதான அமர்வில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அரச தலைவர்களுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இணைந்துகொண்டுள்ளார்.

அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, திலக் மாரப்பன, ராஜித்த சேனாரத்ன, மனோ கணேசன் ஆகியோரும் இந்த அமர்வில் கலந்துகொண்டுள்ளனர்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை இறைமையுள்ள ஒரு நாடாகும். அதனால் சர்வதேச தலையீடுகளுக்கு அவசியம் இல்லை. தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்வதற்கு இலங்கை மக்களுக்கு உள்ள உரிமையை வழங்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.

அத்துடன் இலங்கையில் ஜனநாயகம், ஊடக சுதந்திரம், தேசிய நல்லிணக்கம், மனித உரிமைகள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

SHARE