மூடப்பட்டிருக்கும் மன்னார் மனித புதைகுழி மனித எச்சங்கள் – பாதிக்கப்படலாம் என அச்சம்

23
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் சதோச வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுவருகின்றது.
மன்னார் மாவட்ட நீதமன்ற  நீதிபதி ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் சதோச வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப்பபடுத்தப்படும் மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி இடம் பெற்று வருகின்றது.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்ட அகழ்வு பணியானது அதன் பிறகு இன்றுவரை இடம் பெறவில்லை என அறிய முடிகின்றது. உரிய விதமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாது மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக மன்னாரில் இவ் வாரம் முழுவதும் மழை பெய்வதற்கான காலநிலை காணப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை மழை பெய்துள்ளது. அதனால் குறித்த வளாகத்தில் தோண்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் உள்ள மனித எச்சங்கள் சேதப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. கடந்த மாதத்தில் மழை பெய்தால் மனித எச்சங்கள் பாதிக்காத வகையில் டெண்டுகளால் மூடப்பட்டு சாதாரண பாதுகப்பு ஏற்பாடுகள் மாத்திரமே செய்யப்பட்டு காணப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது அந்த ஏற்பாடுகளும் ஓழுங்கின்றி காணப்படுவதனால் மழை பெய்யும் பட்சத்தில் குறித்த புதை குழியானது முற்றாக சேதப்படும் வாய்புக்கள் காணப்படுகின்றது. எனவே உரிய நிறுவனங்கள் இவ்விடயத்தில் அக்கரையுடன் செயற்படுமாறு மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
 
SHARE