ஆலயத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

50

வடக்கு மாகாணசபை யாழ் மாவட்ட உறுப்பினர்  என். விந்தன் கனகரட்ணம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அரியாலை நாவலடி, கோட்டை விநாயகர் வீதி அருள்மிகு ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்திற்கு ரூபா எழுபத்தைந்து ஆயிரம் பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அரியாலை நாவலடி, கோட்டை விநாயகர் வீதி அருள்மிகு ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்திற்கு ரூபா எழுபத்தைத்து ஆயிரம் பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்களைக் கொள்வனவு செய்து வழங்கி வைத்தார்.

மேற்படி ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் அனைவரினதும் கோரிக்கைக்கு அமைவாக நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம், அரியாலை நாவலடி, கோட்டை விநாயகர் வீதி அருள்மிகு ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்திற்கு ரூபா எழுபத்தைந்து ஆயிரம் பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்களைக் கொள்வனவு செய்து,  27.09.2018 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உப தவிசாளர் ஆர். ஜெயகரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் மதுசுதன் ஆகியோர் ஊடாக வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலளர் திருமதி. அன்ரன் யோகநாயகம் எழிலரசி, நல்லூர் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் விஜிதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

SHARE