பொலிஸாருக்கு கிடைத்த தகவலால் வசமாக சிக்கிய மூவர்

42

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் கள்ள நோட்டுக்களுடன் மூன்றுபேரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, கந்தளாய் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 96ம் கட்டை பகுதியில் சோதனை மேற்கொண்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து தம்புள்ளை நோக்கி பேருந்தில் வருகை, பின்னர் தம்புள்ளையில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்றுக்கொண்டு திருகோணமலை பகுதிக்கு வந்து கொண்டிருந்த காரில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனையின் அடிப்படையில் 5000 ரூபாய் போலி தாள்கள் 469 கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மாத்தறை பகுதியைச் சேர்ந்த கிஹான் ரூபசிங்க, ஹினிதும பகுதியைச் சேர்ந்த உதார விமலவீர, அக்குரணை பகுதியைச் சேர்ந்த அமீர் ஹைதர் அலி எனவும் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்படி விசாரணை இடம்பெற்று வருவதாகவும், இன்றைய தினம் கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE