இணையத்தள மருந்து விற்பனை : தமிழக மருந்து கடைகள் அடைப்பு

36

இணையத்தளங்களில் மருந்துகள் விற்பனை செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி இன்று இந்தியாவிலுள்ள சுமார் 8 இலட்சம் மருந்து கடைகளும் தமிழகத்திலுள்ள 35000 மருந்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இவ் விடயம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன் மருந்து கடைகளை அடைத்து கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இந் நிலையில் இன்று மீண்டும் மருந்து கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இணையத்தளங்களில் மருந்துகளை விற்பனை செய்வது பொது மக்களுக்கு ஆரோக்கியமற்றது என்றும் வைத்தியர்களின் பரிந்துரையில் மட்டுமே விற்கக்கூடிய மருந்துகள் தவறான பயன்பாட்டால் சமுதாயத்தை சீரழிக்க கூடிய சூழ்நிலை உருவாகிவிடும் என்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

SHARE