தூக்கத்தில் உயிரிழந்த பிஞ்சு குழந்தை

41

அமெரிக்காவில் வினோத நோயால் தூக்கத்தில் மரணமடைந்த பிஞ்சு குழந்தையை எண்ணி அதன் தாயார் கண்ணீர் விட்டு கதறியது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வடமேற்கு அமெரிக்காவின் இடாஹோ பகுதியில் குடியிருந்து வருபவர் 21 வயதான கிர்ஸ்டின் ஜான்சன் என்ற இளம் தாயார்.

சம்பவத்தன்று அலுவல் நிமித்தம் வெளியே சென்றிருந்த கிர்ஸ்டினுக்கு அவரது தாயார் தொலைபேசியில் அழைத்து தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அந்த ஒரு நொடியில் உலகமே உடைந்து நொறுங்கியதாக கூறும் கிர்ஸ்டின், தமது பிஞ்சு குழந்தை மைசோன் மைக்கேல் தூக்கத்தில் இருந்து எழும்பவில்லை என தாயார் கூறியது நெஞ்சை அடைத்தது என்றார்.

அலுவலை பாதியில் விட்டுவிட்டு குடியிருப்புக்கு விரைந்த கிர்ஸ்டின், வீடு முழுவதும் பொலிசாரும் மருத்துவ உதவிக் குழுவினரும் நிரம்பி இருப்பதை அறிந்தார்.

மருத்துவர்கள் கடும் முயற்சி மேற்கொண்டும் அவர்களால் அந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

Sudden Infant Death Syndrome எனப்படும் வினோத காரணத்தால் குழந்தை மைசோன் மைக்கேல் தூக்கத்திலேயே மரணமடைந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறந்ததில் இருந்தே இதுவரை குழந்தை மைசோன் முழு ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், இதுவரை நோய் நொடி என மருத்துவரை அணுகியதில்லை என கூறும் கிர்ஸ்டின்,

இந்த நிகழ்வு தம்மை வாழ்நாளில் மறக்க முடியாத வடுவை ஏற்படுத்தி தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE