ஜாஎல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் பலி

135

 

ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்றில் 40 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த குறித்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகனத்தில் சென்ற குறித்த பெண் மீது இனந்தெரியாத ஒருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE