எதிர்வரும் 08ம் திகதி மைத்திரியின் வெற்றி உறுதி.

84

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் எந்தவிதமான அக்கறையினையும் காட்டாதுவிட்டாலும் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்காமல்போனாலும் வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் மைத்திரிபாலவை ஆதரிப்பது என முடிவெடுத்துள்ளனர். காரணம் ஆட்சி மாற்றம் தேவை என்பதற்காகவே. சிறிமாவோ பண்டாரநாயக்கா, ஜே.ஆர், ரணசிங்க பிரேமதாஸா, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நால்வரும் இனவழிப்பினை அன்று மேற்கொண்டவர்கள். அதன்பிறகு ஜனாதிபதியாகவந்த மஹிந்த அவர்களும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை மேற்கொண்டவர். ஆகவே இருவரும் ஒன்று.

இவையெல்லாவற்றையும் அறிந்திருந்தும், வரலாறுகளை படித்தும் மக்கள் இன்று தெளிவாக இருக்கின்றனர். ஆட்சிமாற்றங்கள் ஏற்படுவதன் ஊடாக வருகின்ற அரசுகளுடனும் பேச்சுக்களை ஆரம்பித்து தொடர்ந்து எமது அரசியல் பணிகளை செய்யமுடியும் என்பதே மக்களது எதிர்பார்ப்பு. ஆகவே எதிர்வரும் தேர்தலில் மைத்திரியின வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE