அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் வவுனியாவில் சத்தியாக்கிரகப்போராட்டம் – ஈ.பி.ஆர்.எல்.எவ் உடன் ஈ.பி.டி.பி பங்கேற்பு

24

வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான சத்தியாகிரகப் போராட்டத்தில் நீங்கள் என்னத்தை சாதித்தீர்கள் என்று சிலர் கேள்வி எழுப்பினர்…..?

நான் அவர்களுக்கு கூறும் பதில் பல வருடங்களாக சிறையில் வாடுபவர்களுக்காக அவர்களின் விடுதலைக்காக தொடக்கமான கூட்டு முயற்சி…!

இந்த போராட்டமானது தமிழ் தேசிய சாயம் பூசி அரசியல் செய்வோருக்கும் எதிர்கட்சி தலைவருக்கும் மற்றும் முதலமைச்சருக்கும் சூடு சுறணை இருந்தால் இவர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விடுவிக்க முயற்சி செய்வார்கள்……!

ஒன்று மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.நீங்கள் கூறிய நல்லாட்சியில் இவர்களை விடுவிக்க முடியாத உங்களால் கண்டிப்பாக தமிழ்தேசியம் சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாது…….!

வரலாற்றில் முதற் தடவையாக கிளிநொச்சியில் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது முன்னாள் முதலமைச்சர் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் வரதராஜப்பெருமாளும் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கலந்துகொண்டிருந்தனர். இவ்வியக்கத்தினரால் கடந்த காலங்களில் தமிழினத்திற்கு எதிராக பல வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதை அனைவரும் அறிந்ததே. எனினும் இவ்வியக்கம் தான் செய்த பிழைகளை வருந்தி புண்ணியம் தேடுவதற்காக தற்போது அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. ஆனால் இவர்களைக் காலம், மக்கள் மன்னிப்பார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. பொது அமைப்புக்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றபோது ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரண்டு வருவார்கள். கட்சி அரசியலுக்காக மாகாணசபைத் தேர்தலை இலக்குவைத்து அரசியல் செய்ய நினைத்தால் போராட்டங்கள் தோற்றுப்போகும் அதேநேரம் எதிரி பலமாகிவிடுவான் என்பதே உண்மை.

 

மக்கள் அறவழிப் போராட்டங்களை நடத்துவதற்கு அரசியல் தலைமைகள் ஒத்துழைப்பின்றி செயற்படவேண்டும். தியாகி திலீபனின் போராட்டமும் அதையே எடுத்துச்சொல்கிறது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்பதே. வவுனியாவில் மாணிக்கம் ஜெகன் என்பவர் கடந்த காலங்களில் புளொட் மாணிக்கதாசன் என்பவருடன் இணைந்தே செயற்பட்டவர். அதற்கான ஆதாரபூர்வமான காணொளிகளையும் எமது செய்தி நிறுவனம் வெளியிட்டது. கலையைக் கலையாகப் பார்க்கவேண்டும். போராட்டத்தை போராட்டமாகப் பார்க்கவேண்டும். நீங்கள் கடந்த காலத்தில் செய்ததை மறந்தாலும் மக்கள் மறக்கமாட்டார்கள். ஒற்றுமை என்ற போர்வையில் துரோகிகளை ஒன்றிணைப்பது என்பது முட்டாள்தனம் என்பதையும் நாம் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கிளிநொச்சி போராட்டத்தின் போது…

SHARE