சரத்பொன்சேகா குறித்து ரணிலுடன் சிறிசேன பேச்சு?

67

சரத்பொன்சேகாவிற்கு எதிரான நடவடிக்கை  தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிலர் அமைச்சர்கள் தமது கூட்டுப்பொறுப்பை புறக்கணித்துவிட்டு அரசாங்கத்தின் தீர்மானங்களை விமர்சனம் செய்வது குறித்து ஜனாதிபதி சீற்றத்துடன் உள்ளார் இது குறித்து அவர் பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது ஜனாதிபதியை வெளிப்படையாக விமர்சித்து வரும் சரத்பொன்சேகாவிற்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை யானைகளை தடுப்பதற்கான மின்சார வேலிகள் குறித்து சரத்பொன்சேகாவுடன் மேற்கொள்ளவிருந்த இன்றைய பேச்சுவார்த்தையை ஜனாதிபதி இரத்துச்செய்துள்ளார்

இதேவேளை இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது  ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை விடுப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE