பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளால் மக்கள் அச்சம்

25

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளால் தினமும் ஆபத்தை எதிர்நோக்குவதாக பிரதேச  மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில்  முறிகண்டியிலிருந்து முகமாலை வரை 25 க்கு மேற்பட்ட  பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் உண்டு  இதில் பல முக்கியமான வீதிகளாக நாளாந்தம் நூற்றுக்கணக்கான பொது மக்கள்  பயணிக்கின்ற வீதிகளாகவும் காணப்படுகின்றன.

இந்த பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் கடந்த காலங்களில் பல விபத்துக்களும் இடம்பெற்று பலரும் உயிரிழந்துள்ளனர்.

எனவே இப் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளின்  நிலைமைகளை கருத்தில் எடுத்து பாதுகாப்பான புகையிரத கடவைகளாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள்  கேட்டுக்கொண்டுள்ளனர்.

SHARE