16 வருடங்களிற்கு பின் மோதிய யாழ்ப்பாணத்தின் இரு பெரும் அணிகள்

143

இலங்கை கால்­பந்­தாட்­டச் சம்­மே­ள­னம் நடத்­தும் எவ்.ஏ. கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் நாவாந்­துறை சென். நீக்­கி­லஸ் அணி வெற்­றி­பெற்­றது.

கொழும்பு சிற்றி லீக் கால்­பந்­தட்ட மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் நாவாந்­துறை சென். நீக்­கி­லஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் நாவாந்­துறை சென். மேரிஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

கோல்­கள் இல்­லா­மல் முடிந்­தது முதல் பாதி. இரண்­டா­வது பாதி­யி­லும் அதே­நி­ல­மை­தான். நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் கோல்­கள் எதை­யும் பதி­வு­செய்­யா­ததை அடுத்து சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

முடி­வில் 6:5 என்ற கோல் கணக்­கில் சென். நீக்­கி­லஸ் அணி வெற்­றி­பெற்­றது.

நாவாந்­து­றை­யைச் சேர்ந்த இந்த இரண்டு அணி­க­ளும் கடந்த 16 ஆண்­டு­க­ளாக நேருக்­கு­நேர் சந்­தித்­த­தில்லை.

கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் இந்த இரண்டு அணி­க­ளுக்­கும் இடை­யில் நடை­பெற்ற ஆட்­ட­மொன்­றின்­போது பெரி­ய­தொரு கைக­லப்பு ஏற்­பட்­டது.

விவ­கா­ரம் யாழ்ப்­பாண மறை­மா­வட்­டத்­தில் அப்­போ­தைய ஆயர் தோமஸ் சவுந்­த­ர­நா­ய­கம் ஆண்­ட­கை­யின் கவ­னத்­துக்­கும் கொண்டு செல்­லப்­பட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்து ஏற்­பட்ட தொடர் நட­வ­டிக்­கை­க­ளின் விளை­வாக இரண்டு அணி­க­ளும் நேருக்­கு­நேர் சந்­திக்க வேண்­டிய ஆட்­டங்­க­ளில் சுழற்சி முறை­யில் விட்­டுக்­கொ­டுக்க வேண்­டும் என்று முடி­வு­செய்­யப்­பட்­டது.

எனி­னும், எவ்.ஏ. கிண்­ணத் தொடர் தவிர்க்க முடி­யா­தது என்ற கார­ணத்­தால் நேற்­று­முன்­தி­னம் இண்டு அணி­க­ளும் மோதி­யி­ருந்­தன.

 

 

SHARE