செயற்கைக் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் வாய்ப்பு: எச்சரிக்கும் நாசா

190

xSpaceX மற்றும் OneWeb உட்பட பல விண்வெளி நிறுவனங்கள் மிக அண்மைக் காலத்தில் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களை புவியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பேவதாக சபதம் மேற்கொண்டுள்ளன.

ஆனால், இது பல நெருக்கடிகளையும், ஆபத்துக்களையும் தோற்றுவிக்கும் என நாசா எச்சரிக்கின்றது.

இது தொடர்பாக நாசா தான் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்றில், அனுப்பப்படும் சாட்டிலைட்டுக்கள் தமது நடவடிக்கைகளை முடித்ததும் அதன் ஒழுக்கிலிருந்து மீளப்பெறப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது கிட்டத்தட்ட 4,000 செயற்கைக் கோள்கள் புவியைச் சுற்றியவண்ணமுள்ளன.

இதில் வெறும் 1,800 மட்டுமே செயற்படுநிலையில் உள்ளன.

மேலதிகமாக பல நிறுவனங்கள் பூமிக்கான இணையத் தொடர்பாடலை அதிகரிக்கும் நோக்குடன் சாட்டிலைட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதில் குறிப்பாக SpaceX ஆனது 12,000 இணையத்தள சாட்டலைட்டுக்கனை அனுப்பவென அனுமதி கோரியுள்ளதுடன், OneWeb ஆனது 720 சாட்டிலைட்டுக்களுக்கு அனுமதி பெற்றதற்கும் மேலாக 1,260 சாட்டிலைட்டுக்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன.

இவையனைத்தும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுமாயின் அப்போது உள்ள செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதிலும் நான்கு மடங்காக இருக்கும்.

இது பாரிய சாட்டலைட் மேதல்களுக்குக் காரணமாகலாம் என நாசா எச்சரிக்கிறது.

நாசா இது தொடர்பாக மேற்கொண்டிருந்த ஆய்வொன்றின் அடிப்படையில், கிட்டத்தட்ட 99 வீதமான சாட்டிலைட்டுக்கள் அவற்றின் செயற்பாட்டுக் காலம் முடிவடைந்ததும் திரும்பப்பெறப்பட வேண்டும் என விவாதமொன்றை முன்வைத்துள்ளது.

SHARE