தனியாக செல்லும் பெண்களிடம் கைவரிசையை காட்டிய நபருக்கு நேர்ந்த கதி!!!

29

வீதியில் தனியாக துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் பெண்களின் கைப்பை மற்றும் கையடக்கத் தொலைப்பேசிகளை தொடர்ச்சியாக கொள்ளையடித்து வந்த தச்சன்தோப்பு கைதடி பிரதேசத்தினை சேர்ந்த சந்தேக நபரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து நவீன கையடக்கத் தொலைபேசிகள் உட்பட 18 தொலைபேசிகள், பெண்களின் கைகடிகாரம் 2, வங்கி புத்தகம் 6, தே.அ.அட்டைகள் 3, சாரதி அனுமதி பத்திரம் 1, பெண்களின் கைப்பைகள் 4 மற்றும் 19000 ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலும் கொள்ளையடிக்க பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

தங்களது உடமைகளை பறிகொடுத்த உடமையாளர்கள் பொருட்களை அடையாளம் காட்ட முடியுமாயின் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பெரும் குற்றப்பிரிவிற்கு வந்து அடையாளம் காட்டுமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

SHARE