அம்பலாங்கொடையில் துப்பாக்கியுடன் இருவர் கைது

132

அம்பலாங்கொடை பிரதேசத்தில் வைத்து ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்களை அம்பலங்கொடை பொலிஸார் நேற்றுமதியம் 2.40 மணியளவில் வைத்து கைதுசெய்து பலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது வலிபன்ன மற்றும் மீகஹதன்ன பிரதேசங்களைச் சேர்ந்த 20 மற்றும் 32 வயதுடைய இரண்டு ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவிவல மற்றும் கினிகொட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளின் போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கைதுசெய்த வேளையில் அவர்களிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பான ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இருவரை இன்று பலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

SHARE