அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசியல் ரீதியிலான தீர்மானமே தேவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

142

 

ஜனாதிபதியை கொழும்பில் சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர்

அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசியல் ரீதியிலான தீர்மானமே தேவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.அத்துடன் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அவர் ஜனாதிபதியுடன் இன்று மாலை கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் கூட்டம், ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியை சந்திப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் நேரம் கோரியுள்ளார். இதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த விடயத்தை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE