மூடப்படுகிறது கட்டுநாயக்கவுக்கான அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயில்

21

பேலியகொட சுற்றுவட்டத்துக்கு அண்மித்த பகுதியில் காணப்படும் கட்டுநாயக்கவுக்கான அதிகவே நெடுஞ்சாலையின் நுழைவாயில் இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.

இதன் காரணமாக பேலியகொட நுழைவாயில் பகுதிக்கான  உள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளும் மாற்றப்பட்டுள்ளது.

புதிய களனிப் பாலத்தின் நிர்மானப் பணிகளின் காரணமாகவே குறித்த நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இக் காலப் பகுதியில் மேற்படி நுழைவாயிலை பயன்படுத்தி கொழும்பு, கட்டுநாயக்க அதிகவே நெடுஞ்சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் வேறு மாற்று நுழைவாயில்களை பயன்படுத்துமாறும் போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அத்துடன் கொழும்பு – கட்டுநாயக்கவுக்கான அதிவேக நெடுஞ்சாலையில் வழமைபோன்று போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE