மாடு வெட்டிய இருவர் கைது

124

துன்னாலை பகுதியில் அனுமதியின்றி இறைச்சிக்காக மாட்டினை வெட்டிய இருவரை நெல்லியடி பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்தனர்.

துன்னாலை பகுதியில் உள்ள காணியொன்றினுள் மாடு வெட்டப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் மாட்டினை வெட்டியவர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் போது அவர்கள் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மாட்டினை வெட்டியமையை கண்டறிந்தனர். இதனையடுத்து வெட்டப்பட்ட இறைச்சியையும் , கைது செய்ப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

இறைச்சிக்காக வெட்டப்பட்ட மாடு களவாடப்பட்ட மாடா எனும் கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE