ஆரோக்கியமாக வாழ இந்த உணவுகளை உண்ணுங்கள்

135

நாம் உண்ணும் ஆரோக்கியமான உணவுகள்தான் நம் உடல் மற்றும் உயிருக்கும் ஆதாரமாகவும் விளங்குகின்றன.

மேலும் காலை உணவே நம் உடலுக்கும் மூளைக்கும் தேவையான சுறுசுறுப்பைத் தரும்.

எனவே காலை வேளையில் நாம் எந்த உணவை எவ்வாறு எடுத்துக்கொள்ளலாம், எவற்றைத் தவிர்க்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

பருத்திப்பால்

இரவு தூங்க செல்வதற்கு முன்பு பருத்தி விதைகளைத் தேவையான அளவு ஊறவைத்து பின்பு காலையில் அதில் இருந்து பால் எடுத்து அதனுடன் தேங்காய்ப் பால் மற்றும் பசும்பால் கலந்து குடிக்கலாம்.

பூண்டுக் கஞ்சி

தேவையான அளவு பூண்டு மற்றும் அதனுடன் சாரணைவேர், சுக்கு , முருங்கை இலை, புழுங்கல் அரிசி மற்றும் பசும்பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கஞ்சி காய்ச்சி வாரம் ஒரு முறை காலையில் குடித்துவர, வாயுத்தொல்லைகள் நீங்கும்.

பழைய சோறு

பழைய சோற்றை நீருடன் காலை வேளையில் சாப்பிடுவது நல்லது. பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 முதலான சத்துக்கள் அதிகம் உள்ளன.

மேலும், பழைய சோறு குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், சைனஸ் முதலான தொந்தரவு உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது.

இஞ்சி – தேன்

இஞ்சியைத் தோல் நீக்கி, அரைத்து, சாறு எடுத்து, அதனுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிடலாம். இதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.

வெந்தய நீர்

வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.

உளுந்தங்களி

பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.

தண்ணீர்

விழித்தவுடன் சுத்தமான நீர் இரண்டு டம்ளர் அருந்த மலம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல் இருக்கும். வெந்நீர் அருந்த மந்தம் நீங்கும்.

கேழ்வரகு கஞ்சி

கேழ்வரகை முளைக்கட்டி அரைத்து, பால் எடுத்துக் கஞ்சி காய்ச்சி அருந்தலாம். இதில் கால்சியம் நிறைவாக உள்ளதால், எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்குச் சிறந்த பானம்.

காலையில் எதைத் தவிர்க்க வேண்டும்?

காலையில் மிகவும் புளிப்பு உணவுகளான எலுமிச்சை, புளி, தக்காளி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

வாழைப்பழம், எண்ணெயில் பொரித்த உணவுகள், மாமிச உணவு, இளநீர் முதலானவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

தினமும் டீ, காபி முதலானவற்றை காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

SHARE