போலீஸிடம் சிக்கிய பிரபல சின்னத்திரை நடிகை- கைது செய்யப்பட்டுள்ளாரா?

129

தாம்பரத்தை சேர்ந்த முத்தையா என்பவர் பிரபல சின்னத்திரை நடிகை மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதாவது கடந்த 29ம் தேதி இரவு இன்ஸ்பெக்டர் தாம்சன், தாம்பரத்தை சேர்ந்த சிறுத்தை பாண்டியன், அவருடைய மனைவியும், டி.வி. நடிகையுமான சஜினி மற்றும் ரவுடிகள் பலர் எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, என்னை மிரட்டி, ரூ.10 லட்சம் காசோலையை வாங்கிச்சென்றனர்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஆனால் அவர்களை கைது எல்லாம் செய்யவில்லை என்றனர்.

SHARE