மிரண்ட எதிரணி! வைரலாகும் வீடியோ

136

சிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகீர் ஹாட்ரிக் விக்கெட்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

சிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இதில் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த 4-வது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

இந்த ஆட்டத்தில் இம்ரான் தாகீர் 24 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றி எதிரணியை மிரட்டினார்.

இதற்கு முன்னர் அந்த அணியின் லாங்வெல்ட், டுமினி, ரபடா ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE