பெண் மீது துப்பாக்கி பிரயோகம் ; சந்தேக நபர் கைது

22

ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தமை தொடர்பில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காரொன்றில் பயணித்த 40 வயதான பெண் மீது மற்றுமோர் காரில் வந்த இனந்தெரியாத நபரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பின்னர் படுகாயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந் நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த பேலியகொட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர், அத்துருகிரிய பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபரை கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவர் 28 வயதுடைய பாதாள உலக குழுவின் உறுப்பினர் எனவும், அவர் கொலைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய காரையும் பேலியகொட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர் மீட்டுள்ளனர்.

SHARE