பிரித்தானியர்கள் அவசரமாக தங்கள் பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்க வேண்டும்

135

Brexit ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதால் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுவரும் பிரித்தானியர்கள் உடனடியாக தங்கள் பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்துக் கொள்ள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தங்கள் பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்துக் கொள்ளாத பிரித்தானியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதில் தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புடன் உரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளாதவரை பிரித்தானியர்கள் தற்போது வைத்திருக்கும் பாஸ்போர்ட்டுகள் செல்லாதவை என மாறிவிடும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் தங்கள் பாஸ்போர்ட்டுகள் செல்லுபடியாகும் காலகட்டத்தின் கடைசி ஆண்டில் இருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

பாஸ்போர்ட்டு விவகாரம் மட்டுமின்றி கட்டண உயர்வையும் பிரித்தானியர்கள் எதிர்கொள்ள நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக மருந்து வகைகள், வாசனைப் பொருட்கள் மற்றும் மொபைல் கட்டணங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வாகன ஓட்டுநர் உரிமம் கூட செல்லுபடியாகத நிலை ஏற்படும் என அரசு எச்சரித்துள்ளது. பிரித்தானியா சுற்றுலா பயணிகள் உடனடியாக சர்வதேச வாகன ஓட்டுநர் அனுமதி பத்திரம் ஒன்றை 5.50 பவுண்டுகள் கட்டணத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE