மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இளம் நடிகை!

22

சினிமா நடிகைகளுக்கு பொதுவாகவே ரசிகர்கள் செல்வாக்கு அதிகம் இருக்கும். அப்படியானவர்களில் ஒருவர் பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகை ஸ்ரத்தா கபூர். பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடித்து வந்தார். கடந்த 27 ம் தேதி அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் அவரால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலவில்லை, இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதனால் தீவிர சிகிச்சையில் இருக்கிறாராம். ரசிகர்கள் மிகுந்த வருத்ததுடன் இருப்பதால் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல்நலம் பெற்றதும் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்.

ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் குணமாகிவிடுவேன். உங்கள் அன்பை எப்போதும் நேசிக்கிறேன் என கூறியுள்ளார்.

SHARE