ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ தினமும் செய்ய வேண்டியவை

36

சந்தோசமான வாழ்க்கைக்கு உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் மிகவும் அவசியம்.

ஆனால் வேலை, குடும்பம், சமூகம் என பல வேலைகளில் நாம் அதிகம் கவனம் செலுத்துகின்றோம்.

மேலும் இதுபோன்ற சமயங்களில் நாம் செய்யும் சில செயல்கள் நம் உடல் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கிறது.

ஆரோக்கியமாக வாழ செய்யவேண்டியவை
  • தினமும் காலை எழுந்தவுடன் நிதானமாக 1லி தண்ணீர் பருகுங்கள். இப்படி தினமும் தண்ணீர் குடிப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய முடியும்.
  • தினமும் காலையில் பல்துலக்கும் போதும் குளிக்கும்போதும் தொண்டைக்குழியை சுத்தம் செய்யுங்கள்.இதனால் தொண்டை, நாசியிலுள்ள சளி,தலையிலுள்ள நீர் இறங்கி சுவாசம் சீராகும்.
  • காலை உடலை வருத்தாமல் தியானம், மூச்சுப்பயிற்ச்சி, யோகா செய்வதால் மனம் அமைதியடைந்து படபடப்பு இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை.
  • பொட்டாசியச் சத்துக்கள் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், உருளைக்கிழங்கு, வெள்ளரி, ஆரஞ்சு, முட்டைக்கோஸ், தக்காளி, காலிபிளவர், கீரை போன்ற உணவுகளை காட்டாயம் உண்ணுங்கள்
  • வேலை செய்யும் இடத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காதீர்கள். மேலும் அலுவலகத்தில் உங்கள் இருக்கையை விட்டு நகர்ந்து செல்வதற்கான காரணங்களாக்கி கொள்ளுங்கள்.
  • இரவு பணி முடிந்து அதிக நேரம் கழித்து உறங்க செல்லாதீர்கள். குறைந்த பட்சம் 7-8 மணி நேர தூக்கத்தை உறுதி செய்யுங்கள்.
  • புதிய பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள், புத்தகம் படிப்பது, படம் வரைவது, வாக்கிங் செல்வது போன்ற தொழில்நுட்பம் தொடர்பில்லாத விஷயங்களாக இருக்க வேண்டும் அது உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பெருக்கும்.
  • உணவு உண்டபின் அரைமணி நேரம் கழித்து தண்ணீர் அதிகம் பருகுங்கள். தண்ணீர் அதிகம் பருகுவதால் உணவு கரைந்து எளிதாக குடலுக்குள் செல்வதால் குடல்வாயு கலைகிறது.
  • இரவு அதிகம் கண் விழிக்காதீர்கள்.கணிணி, தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவற்றை தவிருங்கள்.
  • ஊட்டச்சத்துகள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழங்களும், காய்கறிகளும் தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளப்படுவதே ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும்

SHARE