அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி முல்லைத்தீவில் போராட்டம்

30

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும், அவர்களது உண்ணவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையிலும் முல்லைத்தீவில் மாபெரும் கண்டன போராட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த போரட்டம் வன்னிக்குறோஸ் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக எதுவித விசாரணைகளுமின்றி சிறையில் உள்ள அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்க கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“ஸ்ரீலங்கா அரசே! நல்லிணக்க அரசே! அரசியல் கைதிளுக்கு பொதுமன்னிப்பு வழங்கு” “அரசே ரத்துசெய் ரத்துசெய் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துசெய்” “தமிழ் அரசியற் கைதிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களை விடுதலை செய்” போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இக் கண்டனபோராட்டத்தை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனதிராஜா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், பொது அமைப்புக்களும் இணைந்து மேற்கொண்டுள்ளதுடன் மாவட்ட அரசாங்க அதிகாரியிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இவர்களின் விடுதலைக்காகவும் அவர்களுக்கு ஆதரவளித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக வன்னிக்குறோஸ் வெகுஜன அமைப்புகளின் ஒன்றிய ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், கிராம அமைப்புகள், விளையாட்டு கழகங்கள், வர்த்தகர்கள் கலைஞர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

 

 

 

SHARE