முப்படை தளபதிகளை சந்தித்த பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர்

142

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன் ஜெனரல் இக்ரம் உல்ஹக், இலங்கை பாதுகாப்பு படைகளின் பிரதானி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜய குணரட்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ஆகியேரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையில் மேலும் பன்முக மற்றும் வலுவான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தல் தொடர்பான பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது.

மேலும் இலங்கைக்கு பாகிஸ்தான் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பினை வழங்குவதுடன் பிராந்தியத்தில் சமாதானத்தினையும் விருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படும் என பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

SHARE