கண் பார்வையை தெளிவாக்க தினமும் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்

50

கண் பார்வை குறைப்பாடு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இக்காலத்தில் உள்ள குறைப்பாடுகளில் ஒன்றாகும்.

இதற்கு காரணம் சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு கொழுப்பு உணவுகளை பலரும் விரும்பி உண்ணுகின்றனர். இதனாலே கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடுகின்றது.

மேலும் கண் பார்வை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவுகள் என்ன என்பதை பற்றி தெரிந்து தினமும் உண்டு வந்தால் ண் பார்வையை மேம்படுத்தலாம்.

கீரை வகைகள்

வார‌த்‌தி‌ல் குறை‌ந்தது இர‌ண்டு முறையாவது நா‌ம் உ‌‌‌ண்ணு‌ம் உணவில் கீரையைச் சேர்த்துக் கொ‌ண்டு வ‌ந்தா‌ல், முதுமையில் ஏற்படும் க‌ண் பார்வை கோளாறுகளை தடு‌க்கலா‌ம்.

அன்னாசிப் பழம்

தினமும் ஒரு அன்னாச்சி பழம் சாப்பிட்டு வாந்தால் கண்களுக்கு மிகவும் நல்லது. மேலும் கண்களில் எந்த நோய் தென்பட்டாலும் அன்னாசிப் பழம் அடிக்கடிசாப்பிட்டு வந்தால் குணமாகும்.

ஊட்டசத்து நிறைந்த உணவுகள்

பால், மீன், முட்டைகோசு, கேரட், கீரை, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அ‌திகமாக உ‌ள்ளது. எனவே இவ‌ற்றை உ‌ண்டு வ‌ந்தா‌ல் க‌ண் பா‌ர்வை குறைபாடு உ‌ள்ளவ‌ர்களு‌க்கு‌க் கூட பா‌ர்வை‌த் ‌திற‌ன் அ‌திக‌ரி‌க்கு‌ம்.’

மலைவாழைப்பழம்

ஒரு மலைவாழைப்பழம், நான்கு ஆப்ரிகாட் பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

நெல்லிக்காய்

கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.

கொத்தமல்லி

சம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

கேரட்

கேரட்டை எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

ச‌ர்‌க்கரை வ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு

ச‌ர்‌க்கரை வ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கை அ‌வி‌த்தோ அ‌ல்லது உண‌வி‌ல் சமை‌த்தோ சா‌ப்‌பி‌ட்டு வந்தால் அதில் உ‌ள்ள வைட்டமின் ஏ கண் பார்வையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

SHARE