பதவியை ராஜினாமா செய்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன்

21

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக இருந்த முன்னாள் அணித்தலைவர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக இருந்து வந்தார்.

ஆனால், அவரது மனைவி ரூத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருவதால், தனது இயக்குனர் பதவியை ஸ்ட்ராஸ் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், தனது மனைவியின் சிகிக்சைக்காக பதவியை ராஜினாமா செய்வதாகவும், இயக்குனர் பதவிக்கு திரும்பவும் வரமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேறு பொறுப்பில் எதிர் காலத்தில் பதவி ஏற்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ட்ராஸின் இந்த முடிவு இங்கிலாந்து கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE