திடீரென ஏற்பட்ட உடல் நடுக்கம்: 36 வயது இளம் பெண் பலி..!

21

திடீ­ரென உடல் நடுக்­கம் ஏற்­பட்டுப் பெண் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்று சர­சாலை வடக்­கில் நடந்­துள்­ளது.

நேற்­றுக் காலை வீட்டு வளவை துப்­பு­ர­வு செய்துவிட்டு குளித்­து­ முடித்த அவர், காலை உணவு அருந்­தி­யுள்­ளார். அப்­போது அவ­ருக்கு உடல் நடுக்­கம் ஏற்­பட்­டுள்­ளது.

அதன்­பின்­னர் அவர் படுக்­கச் சென்­றுள்ளார். அவர் அசை­வின்­றிக் காணப்­பட்­டதால் வைத்தியசாலைக்­குக் கொண்டு சென்­ற உறவினர்களிடம், பரி­சோ­தனை செய்த வைத்தியர் அவர் இறந்­து­விட்­டதாக கூறி­யுள்ளார்.

உயி­ரி­ழந்­த­வர் 36 வய­து­டை­ய­வர் என தெரியவந்துள்ளது. மேலும், சம்­ப­வம் தொடர்­பாக சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்

SHARE