பெண்ணை சுட்டுக்கொலை செய்த சந்தேகநபர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு

27

பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 30 ஆம் திகதி கந்தானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் சிலாபத்திலிருந்து அழைத்துவரும் போது அவர் தண்டுகம ஓயாவில் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE