இலங்கை வெளியுறவு அமைச்சின் அறிவிப்பு

39

இலங்கையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மாநாட்டு நிகழ்வு ஒன்றில் அமெரிக்கா மற்றும் சீனாவின் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகர் பன்காஜ் சரன், அமெரிக்காவின் ராஜாங்க திணைக்கள உதவி செயலாளர் எலிஸ் ஜி வெல்ஸ், சீனாவின் வெளியுறவு அமைச்சின் கடல் வலய திணைக்கள பணிப்பாளர் இ சியான்லியாங் ஆகியோர் இந்த மாநாட்டு நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

இந்து சமுத்திரமும், எதிர்கால முக்கியத்துவமும் என்ற தலைப்பில் இந்த மாநாடு ஒக்டோபர் 11 ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் நடைபெறவுள்ளன.

இதன்போது இந்து சமுத்திர பாதுகாப்பு உட்பட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

இந்த மாநாடு இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE