ரஜினியின் பேட்ட படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்

23

எந்த நடிகர் பரபரப்பாக பட வேலைகளை கவனிக்கிறாரோ இல்லையோ ரஜினி பேட்ட படத்தில் செம பிஸியாக இருக்கிறார்.

அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளன. இப்போது படம் குறித்து ஒரு குட்டி தகவல், அதாவது படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள சினிமா நடிகரும், நஸ்ரியாவின் கணவருமான பகத் பாசிலை நடிக்க வைக்க படக்குழு அணுகியுள்ளனர்.

ஆனால் அந்த நேரத்தில் அவர் வரதன் என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால் இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

இவர் ஏற்கெனவே சில காரணங்களால் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE