சுனாமி தாக்குதலால் இந்தோனேஷியாவில் பலியானோர் எண்ணிக்கை 1500ஐ தாண்டியது!

43

இந்தோனேஷியா நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 29ஆம் திகதி இந்தோனேஷியாவின் சிலாவெசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உண்டான சுனாமி, கடற்கரை நகரமான பலுவை தாக்கியது.

இதில் கிட்டதட்ட அழிவு நிலைக்கு சென்ற அந்நகரத்தில் இருந்த வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், கட்டிடங்கள் அனைத்து தரைமட்டமாகின. சுனாமி தாக்குதல் மற்றும் இடிபாடுகளுக்கு சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

அந்நாட்டு ராணுவமும், பொலிசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், எங்கு தோண்டினாலும் சடலங்களாக கிடைக்கின்றன. கடைசியாக கிடைத்த தகவலின்படி, சுமார் 1200 பேர் பலியானதாக தெரிய வந்தது.

இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை தற்போது 1571 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பல அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள் என பல கட்டிடங்கள் இடிபாடுகளில் இருந்து அகற்றப்பட்டு வருவதால் பலியானோரின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

SHARE