அதிவேக வீதியை பயன்படுத்துவோருக்கு விசேட அறிவிப்பு

19

நாட்டில் நில­வு­கின்ற சீரற்ற கால­நிலை கார­ண­மாக அதி­வேக வீதியில் பய­ணிக்கும் வாக­னங்­களின் வேகத்தை மணித்­தி­ய­லத்­துக்கு 60 கிலோ­மீற்­ற­ராக குறைக்­கு­மாறு சார­தி­க­ளுக்கு வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

அத்துடன் சீரற்ற கால­நிலை கார­ண­மாக தெற்கு அதி­வேக வீதியின் வெலிப்­பன்ன பரி­மாற்றம் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ள­தாக வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது.

களுத்­துறை – மத்­து­கம வீதியில் வௌ்ளநீர் பெருக்­கெ­டுத்­துள்ள கார­ணத்­தினால் இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE