ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை கண்டித்து போராட்டம்

38

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற முடிவு செய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதைக் கண்டித்து, தலைநகர் லண்டனில் ஆயிரம் நாய்களுடன் போராட்டக்காரர்கள் பங்கேற்ற நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரக்ஸிட் குரைக்கிறது என்ற தலைப்பில், ஆயிரம் நாய்களுடன், நூதன போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

அதில், பிரக்ஸிட் மூலம் பிரித்தானிய மக்களுக்கு மட்டுமின்றி, நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக குற்றம்சாட்டினர்.

கடந்த வாரம் நடைபெற்ற மாநாட்டில் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது முடிவான ஒன்று. இதற்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறியது குறிப்பித்தக்கது.

SHARE