ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அசீஸ் காலமானார்

17

முன்னாள் சட்டமா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அசீஸ் காலமானார்.

தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது 75 ஆவது வயதில் அவர் காலமானார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் முக்கிய பல பதவிகளை வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அசீஸ், அரசியலமைப்புச் சபையின் உறுப்பினராகவும் செயற்பட்டுவந்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எச்.ஏ. அசீஸின் புதல்வரான ஷிப்லி அசீஸ், பல ஜனாதிபதி ஆணைக் குழுக்களின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அசீஸின் ஜனாசா, ராஜகிரிய, லேக் வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, மாலை 5.30 மணிக்கு ஜாவத்த முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

SHARE