சீன ஓபன் டென்னிஸ்: வோஸ்னியாக்கி ‘சாம்பியன்’

33

சீன ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), தரவரிசையில் 20-வது இடம் வகிக்கும் அனஸ்டசிஜா செவஸ்தோவாவை (லாத்வியா) எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வோஸ்னியாக்கி 6-3, 6-3 என்ற நேர் செட்டில் செவஸ்தோவாவை தோற்கடித்து பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆட்டம் 1 மணி 27 நிமிடங்கள் நடந்தது.

இந்த தொடரில் எந்த ஒரு செட்டையும் இழக்காமல் அசத்திய வோஸ்னியாக்கிக்கு ரூ.11 கோடி பரிசுத்தொகையுடன் 1,000 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. இது அவரது 30-வது சர்வதேச பட்டமாகும். 2-வது இடம் பிடித்த செவஸ்தோவாவுக்கு ரூ.5½ கோடி பரிசாக வழங்கப்பட்டது.

SHARE