அவுஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட்: அபார சதமடித்த முகமது ஹபீஸ்

36

அவுஸ்திரேலியாக்கு எதிரான முதல் டெஸ்டில், பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 255 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய இமாம்-உல்-ஹக் மற்றும் முகமது ஹபீஸ் களமிறங்கினர். இருவரும் நிலைத்து நின்று ஆடியதால், அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இந்த ஜோடியை பிரிக்க சிரமப்பட்டனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 205 ஓட்டங்கள் குவித்தது. அதன் பின்னர், இமாம்-உல்-ஹக் 76 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஹபீஸ் டெஸ்ட் அரங்கில் தனது 10வது சதத்தை பதிவு செய்தார்.

பின்னர் 208 பந்துகளில் 15 பவுண்டரிகள் 126 ஓட்டங்கள் குவித்த நிலையில் சிடில் பந்துவீச்சில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த அசார் அலி 18 ஓட்டங்களில் வெளியேறினார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 255 ஓட்டங்கள் எடுத்தது. சொகைல் 15 ஓட்டங்களுடனும், முகமது அப்பாஸ் ஒரு ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

SHARE