ஜப்பான் ஓபன் டென்னிஸ் மெட்வதேவ் அசத்தல்

18

 

 ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான பைனலில் உள்ளூர் நட்சத்திரம் கெய் நிஷிகோரியுடன் (12வது ரேங்க்) நேற்று மோதிய மெட்வதேவ் (32வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார்.

நிஷிகோரி பட்டம் வெல்வார் என ஜப்பான்  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், மெட்வதேவ் அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இந்த தொடரில் நிஷிகோரி 3வது நிலை வீரராகக் களமிறங்கிய நிலையில், மெட்வதேவ் தகுதிச் சுற்றில் வென்று பிரதான சுற்றில்  பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி 1 மணி, 3 நிமிடம் மட்டுமே நீடித்தது.நடப்பு சீசனில் மெட்வதேவ் வென்ற 3வது சாம்பியன் பட்டம் இது.

SHARE