உங்க கைகளில் இந்த முக்கியமான ஏழு ரேகைகள் உடைந்திருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

43

கைரேகைகள் ஒருவரது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது.

ஒருவரது நன்மை,தீமை இரண்டிலும் கைரோகை முக்கிய பங்குவகுகின்றது.

அந்தவகையில் உள்ளங்கையின் மீதுள்ள உடைந்த கோடுகளின் அர்த்தம் என்ன என்பதை அந்த இந்த தொகுப்பில் பார்ப்போம்.

உடைந்த ஆயுள் ரேகை

உங்கள் உள்ளங்கையில் ஆயுள் ரேகை துண்டித்துக் காணப்பட்டால் , நீங்கள் குடும்ப வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும் வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய வீட்டை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிறிய காயமடையும் வாய்ப்புள்ளது.

உடைந்த இதய ரேகை

உங்கள் உள்ளங்கையில் இதய ரேகை துண்டித்துக் காணப்பட்டால், நீங்கள் ஒரு கஷ்டமான திருமணத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் கஷ்டமான உறவுகளைச் சந்திப்பீர்கள்.

உடைந்த தலை ரேகை

உங்கள் உள்ளங்கையில் தலை ரேகை துண்டித்துக் காணப்பட்டால், கல்வியை முடித்து பட்டம் பெறுவது மிகச் சிரமம். மறுபுறம், நீங்கள் எதிர்பாராத நேரங்களில் மன அழுத்தம் ஏற்படலாம்.

உடைந்த சூரிய ரேகை

உங்கள் உள்ளங்கையில் சூரிய ரேகை துண்டித்துக் காணப்பட்டால் , நீங்கள் மதிப்பு அல்லது பணத்தை இழக்க நேரிடும் நிலை உருவாகும். கண் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

உடைந்த திருமண ரேகை

உங்கள் உள்ளங்கையில் சூரிய ரேகை துண்டித்துக் காணப்பட்டால், உங்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்புகள் மிகக்குறைவு. நீங்கள் ஒரு உறவில் இருந்தால் கூட அது நீண்ட காலம் நீடிக்காது அல்லது அது விவாகரத்தில் முடிவடையும் வாய்ப்புகள் உள்ளன.

உடைந்த பயண ரேகை

உங்கள் உள்ளங்கையில் சூரிய ரேகை துண்டித்துக் காணப்பட்டால், பயணத்தின் போது காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் தீவிரமாக இருக்கும். உங்கள் பயணங்கள் வெற்றிகரமாக இல்லாமலும், சில இழப்புகளை அனுபவிக்கும் படியும் இருக்கும்.

உடைந்த விதி ரேகை

உங்கள் உள்ளங்கையில் விதி ரேகை துண்டித்துக் காணப்பட்டால், உங்களுக்கு எதாவது இழப்பு ஏற்படும் என்று அர்த்தம் அல்லது நீங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை சந்திக்க நேரிடும் அல்லது நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

SHARE