ரணிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் லண்டனில் கைதாகிய நாடு கடந்த தமிழீழ அரசின் அமைச்சர்

30

நேற்றைய தினம் (08)லண்டன் ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றியிருந்த ஶ்ரீலங்காவின் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டமானது இரவு 7 மணி தொடக்கம் 10 மணி வரை நடைபெற்றது. ஐ நா தீர்மானங்களை நலினப்படுத்தி போர் குற்றவாளிகளை காப்பாற்றி வரும் ரணிலை இலங்கைக்கு திரும்பி செல்லுமாறு கொட்டொலிகள் முழங்கிய வண்ணம் இருந்தனர்

குறித்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இலண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரக   அதிகாரியால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதிகளின் கொடியினை பயனபடுத்தியமை தொடர்பாக அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியிடம் வழங்கப்பட்ட  தவறானதொரு  முறைப்பாட்டிற்கமைய நாடு கடந்த தமிழீழ அரசின் விளையாட்டு மற்றும் சமூக நலன் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட மூன்று செயற்பாட்டாளர்களையும் பிரிட்டன் பொலிஸார் கைது செய்ததுடன் அவர்களது பெயர் விபரங்களையும் பதிவு செய்து அவர்களது வாகனங்கம் மற்றும் உடமைகளையும் சோதனையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE